சிறிலங்காவில் 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தியது குற்றம் – சம்பிக்க ரணவக்க

23 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தி, அரசாங்கம் கடுமையான குற்றத்தை புரிந்துவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 5000 ரூபாய் கொடுப்பனை அரசியல்மயமாக்குவது தொடர்பாக அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பட்டினியில் உள்ளனர், மேலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் இருந்து அரசாங்க தரப்பு உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி குறித்த கொடுப்பனவினை வழங்கும் நடவடிக்கைக்கு கிராம உத்தியோகஸ்தர்களை மாத்திரமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.