சிறிலங்காவில் இரத்தினக்கல் வியாபாரம் வீழ்ச்சி!

23 0

பாங்கொக் நகரில் உள்ள பிரபல இரத்தினக்கல் பரிமாற்ற தலைமையகம் மூடப்பட்டுள்ளதன் காரணமாக சிறிலங்காவில் இரத்தினக்கல் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறிலங்காவில் உள்ள சுமார் 4 லட்சம் இரத்தினக்கல் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இரத்தினக்கல் வியாபாரிகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.