சமூக இடைவெளி மிகமுக்கியம் – சிங்கப்பூர் பூங்காவில் மக்களை கண்காணிக்கும் எந்திர பிராணி

215 0

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை மக்கள் சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க எந்திர பிராணி பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இணையத்தில் பிரபலமான ஸ்பாட் எனும் மஞ்சள் நிற ரோபோட் நாய் மக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை ஸ்பாட் கண்காணிக்கிறது. ரிமோட் மூலம் இயக்கக்கூடிய இந்த ரோபோட் எந்த விதமான பரப்புகளிலும் மிக சுலபமாக பயணிக்க முடியும். இதை உருவாக்கியவர்கள் இந்த ரோபோட் சக்கரங்களை கொண்ட ரோபோட்களை போன்று இல்லாமல், எல்லா இடங்களிலும் செல்லும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்பாட்
ஸ்பாட் ரோபோட்டில் உள்ள கேமராக்கள், அதன் எதிரே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கொள்ளும். இதுதவிர மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, “உங்களுக்காகவும், உங்கள் அருகில் இருப்பவர்கள் நலனுக்காகவும் தயவு செய்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும். நன்றி.” என தெரிவிக்கிறது.
இதுதவிர சென்சார்கள் கொண்டிருக்கும் ஸ்பாட் மக்கள் மீது மோதாமல் இருக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் எனும் நிறுவனம் இந்த ரோபோட்டை உருவாக்கியது.