பா.ஜ.க.வில் இணைந்தார் விபி துரைசாமி

25 0

திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி இன்று பாரதிய ஜனதாவில் இணைந்தார்.தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். துரைசாமிக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாக வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை பாஜக தலைமையகமான கமாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.பி.துரைசாமி எல்.முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.