புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

401 0

201607021640351546_Narayanasamy-meets-TN-Governor-Rosaiah_SECVPFபுதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து, புதுச்சேரியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று சென்னை வந்த நாராயணசாமி, ராஜ்பவனில் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசினார். கவர்னருடனான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்றுவரும் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a comment