சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் கைது!

464 0

1467370353-4311நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் கைது செய்ய முயற்சி செய்தபோது அவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி காலை பெண் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பொது மக்கள் மத்தியில் நடந்த இந்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் இரவு பகல் பாராது தேடி வந்தனர்.

கொலைக்குப் பின்னர் சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்ததால், கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று, குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மேன்ஷன் காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் செங்கோட்டைக்கு விரைந்தனர். இதையடுத்து செங்கோட்டை அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார் என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை பார்த்து பயந்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனிடையே கழுத்து அறுப்பட்ட நிலையில் அவரை நள்ளிரவில் கைது செய்த போலீசார் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நெல்லை கொண்டு வரப்பட்ட ராம்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராம்குமார் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் பண்பொழி கிரமாத்தைச் சேர்ந்தவர். இவர் ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் வேலை தேடி சென்னைக்கு வந்ததாக கூறப்படுகிறது. சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு மேன்சனில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒருதலைக் காதலால் நிகழ்ந்த பயங்கரம்: நெல்லையில் பிடிபட்டுள்ள ராம்குமார், மென்பொறியாளர் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சூளையில் 3 மாதங்கள் அவன் தங்கியிருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது போலீசாரிடம் சுவாதியை தாம் கொன்றதாக ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சென்னையில் கைப்பற்றப்பட்ட கத்தியில் உள்ள கைரேகையும் ராம்குமாரின் கைரேகையும் ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, கத்தியில் இருந்த கைரேகைப் பதிவுடன் சென்னையில் இருந்து டி.எஸ்.பி. தேவராஜ் பாளையங்கோட்டை சென்றுள்ளார். இதனிடையே ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Leave a comment