தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster.

970 0

 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல், யேர்மனி Münster தாயகக் கனவு அழியாது தமிழீழம் காணும் வரை நம் பயணம் ஓயாது எனும் உறுதியெடுக்கும் நிகழ்வாக தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 யேர்மனி Münster முன்ஸ்ரர் நகர மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு எமது தேசத்தின் விடுதலைக்காக தமது இறுதி மூச்சு வரை போராடி மடிந்த மாவீரர்களுக்கும் , சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கும் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செய்யப்பட்டது.தமிழின அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து நீதி கோரும் வகையில் யேர்மன் மொழியில் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமையை எடுத்துரைக்கப்பட்டது.தமிழீழ தேசத்தை நிறுவும் வரை அயராது உழைப்போம் எனும் உறுதியுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறகும்” எனும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.