சிறிலங்காவில் மூன்றாம் நாள் பரிசீலனைகள் உயர் நீதிமன்றில் ஆரம்பம்

259 0

சிறிலங்காவில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மூன்றாம் நாள் பரிசீலனைகள் இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றில் இடம்பெறுகின்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட 07 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.