சிறுவர்களின் நலன்கள், பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் – ஜனாதிபதி

247 0

maithry1சிறுவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்காக தேசிய கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து, சிறுவர் உலகைப் பாதுகாப்பது வளர்ந்தோர் அனைவரினதும் பொறுப்பாகும்.

அதன்படி, சிறுவர்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தேசிய கொள்கையொன்றை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று,  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அத்துடன், சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக கல்வி வாய்ப்பு சீர்குலைந்த நிலைக்குப் முகம்கொடுத்த மாணவர் ஒருவர் தொடர்பிலும் ஜனாதிபதி இன்று கவனம் செலுத்தினார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய சம்பவத்துடன் குறித்த மாணவன் தொடர்பு கொண்டனர்.

குறித்த மாணவனை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து சந்தித்த ஜனாதிபதி, மாணவனின் கல்விச் செயற்பாடுகள் வெற்றிபெற வாழ்த்தியதுடன், அந்த மாணவனுக்கு விசேட பரிசொன்றை வழங்கி வைத்தார்.