மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் – யேர்மனி

687 0

மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் , யேர்மனி சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி திங்கள்கிழமை மாலை 15 மணிக்கு பேர்லின் ( Pariser Platz 1 , Am Brandenburger Tor ) நகரத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான பரிகார நீதியை வலியுறுத்தியும், எமது மண்ணிற்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கவும், தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை கோரவும் தமது தேசியக் கடமையை உணர்த்துமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் இனஅழிப்பு நடைபெற்ற மே18ம் திகதி கேளிக்கை நிகழ்வுகளையும் மங்களகரமான நிகழ்வுகளையும் தவிர்த்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் வேண்டுகின்றோம்.

மேலும் போர்க்காலத்தில் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக பெருமளவான மக்கள் பட்டினிச் சாவுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. எமது இரத்த உறவுகள் சந்தித்த அந்தக் துயரத்தை நினைவு கூரும் வகையில் அன்றய தினம் அறுசுவையற்ற கஞ்சியினை ஒருவேளை உணவாக கடைப்பிடிக்குமாறும் கோருகின்றோம். கொரோனா கொடிய தொற்றுநோயினால் ஏற்பட்டிருக்கும் சூழலை கருத்தில் கொண்டு தயவுசெய்து அனைவரும் வாய் மூக்கு கவசம் (முயற்சிக்கு அமைய கறுப்பு நிறத்தில்) அணிந்து வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி