மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் மரணம்!

408 0

தம்புள்ளை பொது மலசல கூடத்திற்கருகில் மயங்கிவிழுது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மலசல கூடத்திற்கருகில் இன்று திங்கட்கிழமை இராணுவ சிப்பாய் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கலேவெல – பல்லேபொல பகுதியைச் சேர்ந்த துஷார குமார ஜயசிங்க எனப்படும் இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர் ஹங்வெல்ல – கொஸ்கம பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது, பொது மலசல கூடத்திற்கு சென்று வெளியில் வந்துள்ள சிப்பாய் , திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதன்போது இங்கிருந்த இளைஞர்கள் சிலரும் , யுவதிகளும் இணைந்து அரை மணித்தியால போராட்டத்தின் மத்தியில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையினால், அங்கிருந்த பலரும் தமக்கென்ன என இருந்துள்ளதுடன், விழுந்திருப்பவர் இராணுவ சிப்பாய் என்பதை அறிந்த இளைஞர்களும் , யுவதிகளும் அவரை தம்புள்ளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.