சிறிலங்காவில் நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு

334 0

சிறிலங்காவில் அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை முற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக செயலணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஊடக அறிக்கை

அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதியம் வழமையாக ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை.

இருப்பினும் வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை தினம் இடம்பெறுவதினால், மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை மே மாதம் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் ஓய்வூதியகாரர்களுக்கு ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைப் பெற்றக் கொள்வதற்கு அரசாங்கம் வசதி செய்த வகையில் இந்த மாதமும் , மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக கிராம மட்டத்தில் அரச கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து அனைத்து பிரதேச செயலாளர் பிரிவவுகளிலும் உள்ள ஓய்வூதியகாரர்களை வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் , அங்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களுக்கும் அழைத்துச் செல்வதற்கும் வைத்திய சிகிச்சையை (கிளினிக்) மேற்கொள்வதற்காக அருகில் உள்ள மருத்துவ மற்றும் ஆயர்வேத வைத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியத்தருகின்றோம்.