வேம்பம்குளத்தில் விபத்து; இருவர் காயம்!

477 0

வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன் இளைஞர் ஒருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.