தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் தலைமை அலுவலகத்தில் மாமனிதர் சிவராமிற்கு வீர வணக்கம்!

397 0

சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் நினைவேந்தல் இன்று (29) தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

mani

சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பாக தங்களுக்கு எதுவும் தெரியாது என அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசு கூறியது. இன்றுவரை இது தொடர்பாக உரிய விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

kandipan

ஊடகவியலாளர் சிவராம், மற்றும் நிமலராஜன் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களை சிங்கள படைகளும் ஒட்டுக்குழுக்களும் படுகொலை செய்தமை இன்றுவரை ஊடகவியலாளர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.

vasuki

ஊடகவியலாளர் சிவராம் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை மதிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய இன்று அவரது 15 ஆவது நினைவேந்தல் நிகழ்வை அனுட்டித்துள்ளது.

மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி காண்டீபன், மகளிர் அணித்தலைவி வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி அக வணக்கம் செலுத்தப்பட்டது.