பங்களாதேஷ் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீட்பு

4708 21

1931088766Bangபங்களாதேஷ் டக்காவின் விருந்தக மொன்றில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 பேரில், இரண்டு இலங்கையர்கள் உட்பட 13 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் தொழில்புரிந்துவரும் இலங்கையை சேர்நத ஒருவரும் அவரது மனைவியுமே தற்போது மீட்ப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பாங்களாதேஷின் உயர்த்தானிகரகம் தெரிவித்துள்ளது.

குறித்த உணவத்தில் இருந்தவர்களை ஐஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்தனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர்.

மேலும் உணவதக்தில் இருப்பவர்களை மீட்பதற்கான பணிகளில் பங்களாதேஷ் படையினர் தொடர்ந்தும் ஈடுப்பட்டுவருகின்றனர்.

Leave a comment