சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரிப்பு

408 0

சிறிலங்காவில்  மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை உறுப்பினர்கள் 29 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த 29 பேரும் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவர்களுக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.