திரிபோஷா பக்கற்றுகளை உரியவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை

281 0

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா பக்கற்றுகளை குடும்ப மருத்துவ அதிகாரிகளுடாக உரியவர்களக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.எம். பத்ராணிஜயவர்தண , இந்த செயற்பாடுகளில் குடும்ப மருத்துவ அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும், இந்த திரிபோஷா பக்கற்றுகளை அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கொவிட் – 19 வைரஸ் பரவலின் காரணமாக ஆரோக்கியமான சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் சுகாதார சேவையை வழங்குவதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் சுகாதார அமைச்ச முன்னெடுத்துள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போசாக்குக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு வந்த திரிபோஷா பக்கற்றுகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அதற்கமைய குடும்ப மருத்துவ அதிகாரிகள் இந்த செயற்பாடுகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஊடாக திரிபோஷா மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான விட்டமின் மருந்துவகைகளும் வழங்கப்படவுள்ளன. இதேவேளை இம்மாதத்திற்கான குழந்தைகளின் நிறைகள் கணக்கிடபடாமையினால், கடந்தமாத நிறைக்கமையவே இந்த திரிபோஷா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையினால் , நோய் எதிர்ப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது. இதனால் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளையும் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் , இதற்கமைய ஒவ்வொரு பகுதிகளுக்கும் இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக அப்பகதிகளில் ஊள்ள சுகாதார பிரிவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை மக்கள் ஒன்றுக் கூடாத வகைளில் குறிப்பிட்ட பகுதியினரை அழைத்து பகுதி பகுதியாக தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த செயற்பாடுகளுக்காக சுகாதார அமைச்சினால் அனைத்து மருத்துவ பிரிவுக்கும் மேலதிகமாக வாகனம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர் ஒருவரும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த செயற்பாடுகள் தொடர்பான மேலதிக தகவல்களை குடும்ப மருத்துவ அதிகாரிகளிடம் அறிந்துக் கொள்ளமுடியும்.