மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள்-ரஞ்சித் ஆண்டகை

280 0
சிறிலங்காவில்  கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் (21) ஒரு வருடம் நிறைவடைகிறது.

இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சிறிலங்காவின் கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர்.

இந்தத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், மூன்று ஹொட்டல்களை இலக்கு வைத்து இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சஹரான் ஹாஸிம் என்ற பிரிவினைவாதியால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குழந்தைகளும், பெண்களும், வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.

இந்த சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.