கைதியொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

229 0

கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பூஸா சிறைச்சாலையைச் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவருக்கு காயச்சல் ஏற்பட்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் , கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், வைத்திய பரிசோதனையில் குறித்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சந்தேகநபர், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.