ஒவ்வொரு பொது மகன் மீதும் 19 500 ரூபாய் வரி

256 0

wasantha_s-450x300இந்த முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பொதுமகன் மீதும் 19 ஆயிரத்து 500 ரூபாய் வரி சுமை சுமத்தப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு குடும்பத்திடம் இருந்து 80 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமான தொகை வரியாக அறிவிடப்படும்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மேலதிகமாக வரியாக அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் மோசடிகளை மறைப்பதற்கு வங்கியின் அதிகாரிகளின் வேதனம் 115 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.