தமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை

319 0

கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் மட்டுமல்லாது சில தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தற்போது சென்னையில் கிண்டி கிங்ஸ் ஆய்வகம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, திருவாரூர், தேனி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஆய்வகங்கள் உள்பட 11 அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இதேபோல கோவை வடவள்ளியில் உள்ள மைக்ரோ பயாலஜிக்கல் ஆய்வகம், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, சென்னை போரூர் ராமச்சந்திரா ஆய்வகம், கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் ஆய்வகம், தரமணியில் உள்ள ஒய்.ஆர்.ஜி. சென்டர் என 6 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் தாம்பரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 2 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல மதுரையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மற்றும் திருச்சியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.