நாளை இறுதி நாள் – பொலிஸாரின் எச்சரிக்கை…! மீறினால் கைது

359 0

கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அவ்வாறு பதிவு செய்வதற்கான கால எல்லை ஏப்ரல் 1 ஆம் திகதி நண்பகல் வரை மட்டுமே என்றும் அவர்கள் தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மார்ச் 16 முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 1 ம் திகதி மதியம் 12.00 மணிக்குப் பின்னர், பொலிசார் சந்தேக நபர்களை பதிவேட்டின் படி தேடி அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.