கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

239 0
யாழ்ப்பாணம் உடுத்துரை பகுதி கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த கேரள கஞ்சா பொதியொன்று நேற்று (29) கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலைகளில் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களுடைய சட்டவிரோத வியாபாரத்தை நடத்துவதற்கு பல சூழ்ச்சிகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அந்த முயற்சிகளைத் தடுக்க கடற்படை சிறப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதன் படி, நேற்று (29) வடக்கு கடற்படைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் உடுத்துரை கடலில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று இருப்பது கண்காணிக்கப்பட்டது.

குறித்த படகு கடற்படையினரால் மேலும் சோதனை செய்யப்பட்டதுடன் படகிலிருந்து 114 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கண்டுபிடித்தது.

இதன்போது, குறித்த படகு, கேரள கஞ்சா மற்றும் கப்பலில் இருந்த ஒருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் வடமராச்சி கிழக்கு தாலயடி பகுதியில் வசிக்கும் 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.