சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

300 0

முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொணட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கடற்படையால் 5 டிங்கி படகுகளும், ஒரு சட்டவிரோத வலையும், 4,000 கிலோவுக்கு மேற்பட்ட மீன், ஒரு ஜீப் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியது. கைது செய்யப்பட்டவர்கள் புதுமாதலன் பகுதியில் வசிப்பவர்கள் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகுகள், ஜீப் வண்டி, சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களை மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதீவு மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.