வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன

263 0

budgetஇந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளார். என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்லியூ.எ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நிதிச்சபையின் ஆய்வுகளின் கீழ் நிதிச்சபையின் கொடுப்பனவுகளை அந்த சபையே உருவாக்க வேண்டும். அவ்வாறான முறை ஒன்றை அந்தச் சபை உருவாக்கி வருகின்றது.

அத்தோடு 50வீதம் முன்னுரிமையின் அடிப்படையில் வங்கிகளில் கடன் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது நிதிமைச்சரின் பொறுப்பல்ல. மாறாக இது மத்திய வங்கியின் நிதிச்சபையின் பொறுப்பு.

15 வீதக் கடனை வழங்க வேண்டும் என வற்புறுத்தினால் வங்கி முகாமையாளரின் உறவினர்களுக்கே கடன் வழங்கப்படும். அதன் பிரகாரம் இறுதியில் மத்திய வங்கிக்கு வரும் புள்ளி விபரங்களில் 15 வீதக் கடன் வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

அத்தோடு நிதியமைச்சர் மற்றுமொரு அபாயகரமான யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார். 5 இலட்சத்துக்கு அதிகமாக பெறப்படும் கடனை பதிவு செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணத்தை நான் அறியேன்.

நிதியமைச்சர் அவ்வாறான தலையீடு செய்வது தகுந்த விடயமல்ல என நான் எண்ணுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.