உறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை

86 0

நியுயோர்க்கின் மருத்துவர் காமினி டுபேயிற்கு நகரத்தின் நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கும் போது அவரிற்கு மரணம் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பது தெரிந்திருந்தது.

ஆனால் அது இப்படியானதாக ஒரு போதும் இருந்ததில்லை.கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்,சுவாசிக்க முடியாமல் வென்டிலேட்டரில் திணறுவது,நோய் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான விதிமுறைகள் காரணமாக நோயாளியை உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ,போன்ற சூழல் காணப்படுகின்றது.

அனேக தருணங்களில் நோயாளிகள் தங்கள் படுக்கையில் தனித்து மரணிப்பார்கள்,என தெரிவிக்கும் டுபே நான் ஐசியூவிலிருந்து உறவினர்களை அழைத்து விடயத்தை தெரிவிக்கும்போது அவர்களின் துயரத்தை பார்ப்பதும், கண்ணீரை கேட்பதும் அவர்களுடன் தொலைபேசியில் அழுவதும் மிகவும் வேதனையான விடயங்கள் என குறிப்பிடுகின்றார்.

மிகவும் அதிக எண்ணிக்கையானவர்கள் உறவுகள் எதுவுமின்றி தனித்து மரணிக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதுவே மிகவும் பயங்கரமான விடயங்களில் ஒன்றாக உள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

நியுயோர்க் பல்கலைகழகத்தின் லாங்கோன் மருத்துவ நிலையம் மற்றும் ; பெலெவ்யூ மருத்துவமனைகளில் பணியாற்றும் காமினி டுபே நான் முன்னர் ஒருபோதும் நான் இவ்வாறான சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை இது மிகவும் குழப்பமான நிலை காணப்படுகின்றது எங்களை முற்றாக களைப்படையச்செய்துவிட்டது என குறிப்பிடுகின்றார்.

நான் எனது வாழ்க்கையில் உளவியல் உடல்ரீதியாக சுமைக்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் நான் ஒருபோதும் இவ்வளவு சோகமாக ; உணர்ந்ததில்லை என அவர் தெரிவிக்கின்றார்

கொரோனா வைரசினால் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை , டுபே போன்ற மருத்துவர்கள் தாங்களும் தாக்கப்படலாம் என கவலை கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக மருத்துவ பணியாளர்கள் தங்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை கோரும் நிலையேற்பட்டுள்ளது.

நாங்கள் தியாகம் செய்யப்போகின்றோம் என நினைதது இந்த தொழிலிற்கு செல்லவில்லை,இது நாங்கள் எதிர்கொள்ளும் மோசமான நெருக்கடி இதிலிருந்து எங்களை பாதுகாக்கவேண்டும்,நாங்கள் போர்க்களத்தில் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஒருவர் இறப்பதை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கும் விடயம்,எதிர்காலம் எதனை வைத்துள்ளது என்பதை அறியமுடியாததும் கவலையளிக்கின்றது,அதேவேளை நாங்கள் உங்களை பாதுகாப்பதற்கு முயல்கி;ன்றோம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.