வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஜவுளி வியாபாரி ஒருவர் போடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் திடீரென்று ஆவேசமாக தெருவில் ஓடி மூதாட்டி ஒருவரை கடித்துக் குதறினார். இதில் மூதாட்டி உயிரிழந்தார்.
போடி கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி கண்டன்(33). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி இலங்கைக்குச் சென்று மாதக் கணக்கில் தங்கி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். இதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று சோத னை செய்யப்பட்டு போடியில் உள்ள இவரது வீட்டில் தனி மைப்படுத்தப்பட்டார்.
வீட்டிலேயே இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை திடீரென வெறியோடு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். ஆடையின்றி கத்திக்கொண்டே ஓடியதால் பலரும் விலகினர்.
இந்நிலையில் ஜக்கமநாய க்கன்பட்டி பக்தசேவா தெரு வழியே ஓடிய மணிகண்டன் அங்கு நடந்து சென்ற நாச்சியம்மாளை(90) கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தை ஆவேசமாகக் கடித்துக் குதறினார்.
அருகில் உள்ளவர்கள் மணி கண்டனை கட்டிப்போட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் நாச்சியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
போடி நகர் போலீஸார் மணி கண்டன் மீது வழக்குப் பதிவு செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

