யாழ் அரியாலையில் சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் திருட்டு

319 0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதிக்கு அண்மையாக அரியாலைப் பகுதியில் சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு அங்கு வகைக்கப்பட்டிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மக்களுக்கு வழங்குவதற்கு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் காவல்துறை மற்றும்  சிறப்பு படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது.