யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிடப்பட்ட போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த கடையின் பின்கதவு திறந்திருந்த நிலையில் உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பாவனைக்குதவாத உணவுகள் கண்டெடுக்கப்பட்டன. உணவக உரிமையாளர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

