கொரோனாவை தடுக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார் செந்தில் பாலாஜி

319 0

கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின்படி, தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் சுகாதார பாதுகாப்புக்கான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் கொரோனாவை தடுக்க அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க மாவட்ட ஆட்சியருக்கு செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.