யாழில் பல்வேறு பகுதிகளிலும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை தீவிரம்!

513 0

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பல இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக குறித்த நடவடிக்கை இடம்பெற்றுவருகின்ற நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வலிகாமம், தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காக்கா தீவு சந்தை, சாவல் கட்டு சந்தை, மானிப்பாய் பொதுச்சந்தை, நவாலி பிரசாத் சந்தை, பண்டத்தரிப்பு பொதுச் சந்தை, சாந்தை சந்தை, மாதகல் பொதுச்சந்தை, இளவாலை பொது சந்தை, மாகியம் பிட்டி பொது சந்தை போன்ற பகுதிகளில் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றது.

அத்துடன், ஆனைக்கோட்டை முள்ளி வைத்தியசாலை, மானிப்பாய் கிரீன் வைத்தியசாலை, இளவாலை ஆதார வைத்தியசாலை, பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலை, வலி. தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், வலி.தென்மேற்கு பிரதேசத்துக்கு உட்பட்ட இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பேருந்து தரிப்பு நிலையங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

மேலும், அப்பகுதிகளில் உள்ள வங்கிகள், பொலிஸ் நிலையங்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, தபால் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் குறித்த கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.