அன்னை பூபதியின் நினைவுத்தூபியடியில் 33 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப சிரமதான பணிகள்.

311 0

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபியடியில் 33 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப சிரமதான பணிகள் நடைபெற்றது. இந்நிகழ்வானது நாவலடி பிராந்தியத்திற்குப் பொறுப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொறுப்பாளர் நிதன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் 19.03.2020 அன்று முதல்நாள் சுடரேற்றி மலர்தூபி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ் கல்வி மேம்பாட்டு பொறுப்பாளர் குககுமாரராசா மற்றும் நிர்வாகச்செயலாளர் இருதயம் செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டர். மேலும் இறுதிநாள் நிகழ்வுகளுக்கான நினைவேந்தல் குழு அன்றையதினம் அமைக்கப்பட்டது.