யாரும் உள்ளே வரவேண்டாம்: ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பதாகையால் பரபரப்பு

23 0

வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசின் ஊர் எல்லையில் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். இந்து அறிவிப்பு பதாகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் நோயால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவிலும் அதன்தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாலும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாலும் இந்த வைரஸ் பரவுதாக கிராம மக்கள் கூறினார்கள். இதனால் மூலனூர், காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் தங்கி இருக்கும் வட மாநிலங்களைசேர்ந்தவர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசின் ஊர் எல்லையில் அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். அந்த அறிவிப்பு பதாகையில் கொரோனா கிருமி தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் ஊரில் குடியிருப்பவர்களை தவிர வேறு வெளி நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம்” என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. இந்து அறிவிப்பு பதாகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.