இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறியப்படுகிறது

299 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-3இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் புத்தாண்டில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியிட்டுள்ளன.

முக்கியமான இரண்டு அமைச்சுக்களில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்ய முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது உடனடியாக அவ்வாறு மாற்றங்களைச் செய்யாது சில திருத்தங்களை மட்டும் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.