நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவில் முன் சாலையோரங்களில் திருமணங்கள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்திலும் பெரும்பாலான கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற இருந்தன. ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் இன்று திருமணத்திற்கு உதந்த நாள் என்று கூறி சிலர் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

