தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள அதிர்ச்சி!

320 0

images-12017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து இலங்கை தனியார் தொலைக்காட்சி சேவைகள் கவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிற்கு பின்னணி குரல் கொடுத்து ஒளிப்பரப்பு செய்யப்படுமாயின் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் வரியானது 90 ஆயிரம் ரூபாவில் இருந்து 3 இலட்சத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே இலங்கை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளன.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் போதே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஹிந்தியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பின்னணி குரல் கொடுத்து ஒளிபரப்புச் செய்கின்றன.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நாட்டில் அனைவராலும் விரும்பப்படுகின்றதும் பிரசித்தமானவையாகவும் திகழ்கின்றன.இருப்பினும், பின்னணி குரல் கொடுத்து ஒளிப்பரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி அதிகரிக்கப்படுகின்றமையினால் இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நாட்டில் இனிமேலும் ஒளிபரப்பப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.