பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

285 0

201611120032191412_plus-1-plus-2-students-new-syllabus-pandiyarajan_secvpfபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையும், கொரியன் குடியரசும் இணைந்து பள்ளிக்கல்வியில் தமிழகத்திற்கும் கொரியாவுக்கும் இடையே இணக்கமான புரிதலை உருவாக்குவதற்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை செயலாளர் த.சபீதா முன்னிலை வகித்தார்.

அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகத்தரமான கல்வியை தமிழக மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கம். அதையொட்டி இந்த கருத்தரங்கின் மூலம் தமிழகம் மற்றும் கொரியா கல்வியாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசிப்பது கல்வியில் நல்ல வழி கிடைக்கும். தமிழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிகம். நம்முடைய கல்வி கற்பிக்கும் தன்மை, கற்பிக்கும் திறன், ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை அனைத்தையும் கொரியா கல்வியாளர்கள் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

புதிதாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளார். அவர் வீடு திரும்பிய பின்னர் அவரது ஒப்புதல் பெற்று பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் பற்றிய அறிவிப்பு வெளிவரும். அந்த பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்த முடியாது. அதற்கு பின்னர் தான் அமல்படுத்த முடியும்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தீர்ப்பையொட்டி விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வரும்.இவ்வாறு கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.