பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். இந்த சோதனையை எதிர்த்து அப்துல்லா பெற்றுள்ள வெற்றியானது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நம்முடைய நம்பிக்கையை நிலை நிறுத்தி இருக்கிறது.
தடுப்புக் காவலில் உள்ள உமர்அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

