தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் வழமைபோல சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலை அத்தியட்சகரின் கைப்பேசில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய கைதியை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

