கொரோனா வைரஸ் பீதி,வெறிச்சோடிய பாடசாலைகள்!

330 0

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியமையை தொடர்ந்து அப்பகுதி மக்களிடத்தில் அச்சம் நிலைமை தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தகவலினால் இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நகர் பாடசாலைகளில், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அதாவது மட்டக்களப்பில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

எனினும் குறித்த பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகையில் மாற்றமிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.