ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (09) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பம்பலபிட்டியவில் உள்ள முன்னாள் சபாநாயகரின் இல்லத்தில் நடைப்பெற்ற இந்த கலந்துரையாடலில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்தையை போன்று இரு தரப்பினதும் உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு இரு தரப்பினரும் கோரியதற்கு அமைய கரு ஜயசூரிய பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்தார்.
இதுவரை இந்த பேச்சுவார்தையில் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், இரு தரப்பினருக்கும் அவசியம் என்றால் தாம் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் வகிக்க தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

