பொதுத் தேர்தல் தொடர்பாக விசேட கூட்டம்

295 0

பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று  (10) நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

குறித்த வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக் கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.