இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வா உட்பட முக்கிய அதிகாரிகள் மீது பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள பதிலில் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் இணை அமைச்சர் நிஜல் அடம்ஸ் இலங்கையின் அதிகாரிகளிற்கு எதிராக தடை விதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோயில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்த குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இங்கிலாந்து தன்னாட்சி உலகளாவிய மனித உரிமை தடைகள் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் யார் யாரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என்பi தெரிவிப்பது சரியான விடயமல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையிலான இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகளை , இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்ற அடிப்படையில் பிரிட்டன் நீண்ட காலமாக ஆதரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

