23 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கம்: பாகிஸ்தானில் பிரபல மசூதியில் பெண்கள் நுழையலாம்

325 0

சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர், பெஷாவரில் உள்ள பிரபலமான சுன்னேரி மஸ்ஜித் மசூதியில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ”பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் அமைந்துள்ளது பிரபலான சுன்னேரி மஸ்ஜித் மசூதி உள்ளது. இங்கு 23 ஆண்டுகளாக பெண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் 20 பேர் வரை மசூதியில் வழிபடலாம் என்ற முடிவை மசூதி நிர்வாகம் எடுத்துள்ளது” என்று செய்தி வெளியானது.

மசூதியின் நயீப் இமாம் முகமத் இஸ்மாயில் கூறும்போது, “1996 ஆம் ஆண்டு வரை இங்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். பின்னர் அங்கு தீவிரவாதம் வளர்ந்ததன் காரணமாக பெண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது நாங்கள் பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்” என்றார்.

இந்த நிலையில் இம்முடிவுக்கு பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

நாளை சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட இந்தத் சீர்திருத்த முடிவை தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.