நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உடனடியாக வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் கீழ் புதிய வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்ற அமர்வுகள் மே – 14 இடம்பெறவுள்ள நிலையில் குறுகிய காலத்தில் வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

