நுரைச்சோலை அனல் மின் நிலையம் – 4 ஆவது கட்டப்பணி

351 0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நான்காவது கட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் படாமையினால் நாட்டுக்கு 146 பில்லியன் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நுரைச்சோலை அனல் மின் நிலைய முதலாவது கட்டம் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

2 ஆவது கட்டம் 2014 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் 900 மெஹா வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.