புத்தளம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், புத்தளம் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 151 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் 2 கிராம் ஐஸ் ரக போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

