கிழக்கு பிரான்ஸிலிருந்து ; பாரிஸின் ஸ்ட்ராஸ்பர்க் நோக்கிப் பயணித்த (டி.ஜி.வி0 என்ற அதிவேக ரயில் தடம்புரண்டதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த விபத்து பாஸ்-ரின் பகுதியில் உள்ள இங்கன்ஹெய்ம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த ரயில் 348 பயணிகள் பயணித்த நிலையில் இடம்பெற்ற விபத்தல் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மண்சரிவு காரணமாகக் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

