பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.<
இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்குகின்றோம்.
எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றார்.

