ஆப்கானிஸ்தான்: ஜெர்மனி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்

235 0

201611110924515095_truck-bomb-struck-the-german-consulate-in-afghanistan_secvpfஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மீது தலிபான் திவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கேயுள்ள மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட காரை ஓட்டிவந்த ஒரு தீவிரவாதி, தூதரகத்தின் மதில் சுவர்மீது அந்தக்காரை மோதினான்.

மோதிய வேகத்தில் அந்தக் கார் வெடித்து சிதறிய அதிர்ச்சியில் தூதரகத்தின் அருகாமையில் சில கடைகள் மற்றும் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. ஜெர்மனி தூதரக கட்டிடமும் சேதமடைந்துள்ள காட்சியை உள்ளூர் ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

இந்த தாக்குதலில் இருவர் பலியானதாகவும், குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.